இந்திய மாணவர்கள் விரும்பினால் ஹங்கேரியில் படிப்பை தொடரலாம்!
இந்திய மாணவர்கள் விரும்பினால் ஹங்கேரியில் படிப்பை தொடரலாம் என்று ஹங்கேரி நாட்டின் பிரதமர் விக்டர் ஆர்பன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளையும் கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளது. போர் காரணமாக மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுவரை 18,000 மேற்பட்டோர் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர். உக்ரைனில் இருந்து சுமார் 6,000 அதிகமானோர் உக்ரைன் ஹங்கேரி எல்லை வழியாக நாடு திரும்பினர். எனவே ஹங்கேரி நாட்டின் பிரதமர் விக்டர் ஆர்பனுடன் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
அப்போது உக்ரைனில் இருந்து பாதியிலேயே படிப்பை தொடர முடியாமல் நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் விரும்பினால் ஹங்கேரியில் படிப்பை தொடரலாம் என்று ஹங்கேரி நாட்டின் பிரதமர் விக்டர் ஆர்பன் குறிப்பிட்டுள்ளார்.