செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 10 அக்டோபர் 2015 (12:43 IST)

சூதாட்டத்தில் ஈடுபட்ட சிங்கப்பூர் வாழ் இந்தியருக்கு 30 மாதம் சிறை

கால்பந்தாட்டத்தின்போது சூதாட்டாத்தில் ஈடுபட்ட, சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்த வருக்கு 30 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

 
கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற சிங்கப்பூர் மற்றும் சரவாக் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற மலேசிய சூப்பர் லீக் கால்பந்து போட்டி நடைபெற்றது.
 
இந்த போட்டியில் சிங்கப்பூர் வாழ் இந்தியரான செல்வராஜ் லக்ஷ்மணன் (52) என்பவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் 15ஆயிரத்து 500 சிங்கப்பூர் டாலர் அளவிற்கு சூதாட்டத்தில் ஈடுபட்டது.
 
இவர் தவிர, ஆட்ட நடுவர் ஷோரி நோர் (50) மற்றும் தனசேகர் சின்னையா (40) ஆகிய இருவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விசாரணை முடிவில் மூவர் மீதும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
 
இதனையடுத்து, செல்வராஜ் லக்ஷ்மணனுக்கு 30 மாதங்கள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் சிங்கப்பூர் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. நடுவர் ஷோரி நோர் மற்றும் தனசேகர் சின்னையா ஆகிய இருவருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து கூறியுள்ள துணை அரசு வழக்கறிஞர், “இது போன்ற சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது சிங்கப்பூர் அரசு கொஞ்சம் கூட சகிப்புத் தன்மையை காட்டாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.