'இரட்டிப்பு மகிழ்ச்சி' - பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு நான்காவது பதக்கம்! அதுவும் தங்கம்!


Dinesh| Last Updated: புதன், 14 செப்டம்பர் 2016 (11:27 IST)
பிரேசில் நாட்டின் ரியோவில் நடந்து வரும் மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவில் இருந்து பல்வேறு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 

 
 
இந்நிலையில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா, 63.97 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 
 
அவர், 2004 பாராலிம்பிக்கில் 62.15மீ., தூாரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றவர். தற்போது நடந்த போட்டியில், 63.97 மீ., தூரம் ஈட்டி எறிந்து தனது உலக சாதனையை முறியடித்துள்ளார். இதன்மூலம் பாராலிம்பிக் போட்டிகளில் இரண்டு தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா எனும் சாதனையை படைத்துள்ளார். 
 
முன்னதாக, பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றார். அதே போட்டியில், பஞ்சாப்பை சேர்ந்த வீரர் வருண் சிங் வெண்கல பதக்கம் வென்றார். மேலும், குண்டு எறிதல் போட்டியில் வீராங்கனை தீபா மாலிக் வெள்ளி பதக்கம் வெற்றார்.

தற்போது, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, வீரர் தேவேந்திர ஜஜாரியா, ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம், 2016 பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு நான்கு பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :