மத சுதந்திரத்தை மீறும் நாடுகளில் இந்தியா! – அமெரிக்காவின் அறிக்கை!
உலக நாடுகளில் மத ரீதியான பாகுபாடுகள் மற்றும் வன்முறைகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைக்கப்பட்டுள்ளதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஐக்கிய அமெரிக்க ஆணையம் 2020ம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மத சுதந்திரத்தை மீறும் நாடுகளில் பர்மா, சீனா, ஈரான், நைஜீரியா உள்ளிட்ட 14 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன, அதில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
கடந்த 2004 முதலே இந்த நாடுகள் பட்டியலில் இந்தியா இருந்து வந்தாலும் சமீப காலமாக இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இந்தியாவில் அதிகரித்திருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் ஒன்பது உறுப்பினர்களில் இருவர் மட்டுமே இந்தியாவை இந்த பட்டியலில் சேர்க்க தீர்மானமாய் இருந்ததாக குறிப்பிட்டுள்ள இந்தியா, சீனா, வடகொரியா போல இந்தியா சர்வதிகார நாடு இல்லை என்றும், இந்தியாதான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும் தெரிவித்துள்ளது.