வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 27 பிப்ரவரி 2019 (06:42 IST)

இந்தியா தாக்கியது அதன் சொந்த மண்ணில்தான்: சுப்பிரமணியன் சுவாமி புது விளக்கம்

இந்திய விமானப்படை நேற்று அதிரடியாக பாகிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்து தீவிரவாத முகாம்களை அடிச்சு தூக்கிய நிலையில் இந்திய ராணுவத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதேபோல் மேலும் பதிலடி தாக்குதல்கள் நடத்த வேண்டும் என்ற கருத்து நாடு முழுவதும் நிலவி வருகிறது
 
இந்த நிலையில் நேற்றைய இந்தியாவின் தாக்குதல் அதன் சொந்த மண்ணில்தான் நடந்தது என்றும், நாம் நமக்கு சொந்தமான பகுதியில்தான் குண்டு போட்டுள்ளோம் என்றும், அந்த இடம் தற்காலிகமாகத்தான் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருப்பதாகவும், அதனால் சர்வதேச சட்டத்தை நாம் மீறவில்லை என்றும் கூறியுள்ளார்.
 
சுப்பிரமணியன் சுவாமி ஒரு டுவீட்டை போட்டால் அந்த டுவீட்டுக்கு பெரும்பாலும் எதிர்ப்புகளே இருக்கும். ஆனால் வித்தியாசமாக சுவாமியின் இந்த டுவீட்டுக்கு சமூக வலைத்தள பயனாளிகள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. ஒருசிலர் மட்டுமே இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.