1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 29 ஜூலை 2018 (12:38 IST)

இம்ரான்கானுக்கு அறிவுத்திறன் கிடையாது - போட்டுத்தாக்கிய 2வது மனைவி

பாகிஸ்தான் பிரதமராக ஆகவுள்ள இம்ரான் கானுக்கு சொந்த அறிவுத்திறன் கிடையாது என்றும் அவர் ராணுவத்திற்கு அடிபணிந்தே செயல்படுவார் என அவரது 2-வது மனைவி ரெகம்கான்  கூறியிருக்கிறார்.
கடந்த 25 ஆம் தேதி பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. பாகிஸ்தானில் 270 தொகுதிகள் உள்ள நிலையில் 136 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சி அமைக்கும். அந்த வகையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சிக்கு 117 இடங்கள் கிடைத்துள்ளது. 
 
117 இடங்களை கைப்பற்றியுள்ள இம்ரான்கானின் கட்சி, சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாகிஸ்தானில் புதிய அரசை அமைப்பது உறுதியாகி உள்ளது என தகவல் தெரிவிக்கின்றன.  
 
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இம்ரான்கானின் 2 வது மனைவி ரெகம்கான்,  இம்ரான்கானை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்பது ராணுவத்தினரின் திட்டம்.
 
ஏனென்றால் தங்கள் பிடியில் இருந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், ராணுவத்தினரின் பேச்சைக் கேட்காததால் தான் அவர்கள் தற்பொழுது இம்ரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
முதலில் இம்ரானுக்கு போதிய அறிவுத்திறன் கிடையாது. ராணுவம் என்ன சொல்கிறதோ அதைத்தான் இவர் செய்யப்போகிறார். நேர்மையாக தேர்தல் நடந்திருந்தால் இம்ரான்கானால் வெற்றி பெற்றிருக்க முடியாது என அவர் காட்டமாக பேசியிருக்கிறார்.