வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2015 (19:01 IST)

ராஜபக்சேவிடம் நாட்டைக் கொடுத்தால் அழிவு நிச்சயம் - இலங்கை அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க

மகிந்த ராஜபக்சேவின் கைகளில் நாட்டைக் கொடுத்தால் அழிவு நிச்சயம் என்று இலங்கை அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரிவித்துள்ளார்.
 

 
ஐக்­கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஏற்­பட்­டி­ருக்கும் பிர­த­ம­ர் வேட்பாளருக்கான போட்டி குறித்து கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
 
மேலும் அவர் கூறு­கையில், ”கடந்த பத்து ஆண்­டு­க­ளாக இந்த நாடு பல சவால்­க­ளுக்கு முகம் கொடுத்­துள்­ளது. சர்­வா­தி­கார ஆட்சியாளர்களின் கடும்­போக்கு அர­சி­ய­லுக்கும் நாடு முகம் கொடுத்தது. வெறு­மனே யுத்­தத்தை வெற்­றி­கொண்டு நாட்டை ஆயுத போராட்­டத்தில் விடு­வித்­த­தாக கூறிக்­கொண்டு மக்­களை ஏமாற்­றிய மகிந்த கூட்­டணி நாட்டை அழிவின் பாதையில் கொண்டு சென்றுவிட்­டது.
 
யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வர­வேண்டும் என்­பதில் நாமும் ஆவலோடு இருந்தோம். நாம் கொடுத்த அழுத்­தத்தின் காரணத்­தினால் தான் அர­சாங்கம் தொடர்ந்து யுத்­தத்தை முன்னெடுத்தது.
 
யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன் நாட்டை மாற்றுப் பாதையில் கொண்டு செல்­வ­தற்­கான வாய்ப்­புகள் அதி­க­மாக இருந்தும் முன்­னைய அரசாங்கத்தின் முக்­கிய உறுப்­பி­னர்கள் தமது அதி­கார ஆசையில் சர்வா­தி­கார ஆட்சியை கடு­மை­யாக்­கி­ய­மையும் நாட்டில் அதி­காரக் குவிப்பை மேற்கொண்­ட­மை­யுமே நாம் மகிந்­தாவின் அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேற பிர­தா­னமான கார­ண­மாக அமைந்­தது.
 
கடந்த ஜன­வரி மாதம் இந்த நாட்டில் மிக முக்­கிய மாற்றம் ஒன்று ஏற்­பட்­டுள்­ளது. இது­வரை காலமும் சர்வா­தி­கா­ர­மாக பய­ணித்த ஆட்சிப் பாதை கடந்த ஜன­வரி மாதம் ஜனா­தி­பதித் தேர்­த­லுடன் ஜனநா­ய­கத்தின் பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. இந்த ஆட்சியில் நாடு சரி­யான பாதையில் பய­ணிக்க ஆரம்பித்துள்ளது” என்றார்.
 
இது தவிர, ராஜபக்சேவை மீண்டும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்டமைப்பின் பிர­தமர் வேட்­பா­ள­ராக களமிறங்­கு­வது சாத்தியமானதா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, ”ராஜபக்சேவை மீண்டும் பிர­த­ம­ராக்க ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­டணி முயற்­சிக்க நினைப்­பது மிகவும் முட்டாள் தன­மா­ன­தொரு செயற்பாடாகும்.
 
மீண்டும் மகிந்த ராஜபக்சே கூட்­ட­ணி­யிடம் நாட்டை ஒப்­ப­டைத்தால் நாடு அழிவது உறுதி. அதேபோல் ராஜபக்சேவால் இனிமேல் அரசியலில் கால்­தடம் பதிக்க முடி­யாது. அவரால் மீண்டும் மக்­களின் ஆத­ரவை பெற­மு­டி­யாது” என்றார்.