வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 23 ஜூன் 2017 (10:13 IST)

டூத் பிரஷ் கொண்டு மனைவியை 126 முறை தாக்கி கொன்ற கொடூர கணவன்!!

அமெரிக்காவில் கணவன் டூத் பிரஷ் கொண்டு தனது மனைவியை கொடூரமாய் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
அமெரிக்காவின் விஸ்கசின் மாகாணத்தில் உள்ள மில்வாக்கி நகரத்தை சேர்ந்தவர் யூஜின் மேல்ப்ளோவர். இவரது மனைவி டூத் பிரஷ் கொண்டு கழிவறையை சுத்தம் செய்து வந்து உள்ளார்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த யூஜின் அந்த டூத் பிரஷ் கொண்டே தனது மனைவியை கொடூரமாய் தாக்கி கொலை செய்துள்ளார். 
 
இந்நிலையில், அவர் போலீஸில் சரணடைந்துள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தில், மனைவியின் பல்லை பலமுறை கழிவறையில் அடித்து உடைத்ததாகவும், தொண்டை பகுதியை டூத் பிரஷ்ஷால் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
 
யூஜினின் மனைவி உடலில் டூத் பிரஷ்ஷால் 126 இடங்களில் காயம்  ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது கண்கள், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் தொண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் கசிந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.