செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 18 ஜூலை 2019 (14:59 IST)

மனைவியின் உடலில் 60 இடங்களில் கத்திக்குத்து – கொடூர கொலைக்கார கணவன் !

பிரிட்டனில் வசிக்கும் இந்திய சமையல்காரரான ஜலாலுதீன் என்பவர் தனது மனைவியை 60 இடங்களில் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

வங்கதேச நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் ஜலாலுதீன்- அஸ்மா பேகம். இவர்கள் பிரிட்டனில் வசித்து வந்தனர். சமையல் கலைஞரான ஜலாலுதீன் சூதாட்டத்துக்கு அடிமையாகியுள்ளார். ஒருக்கட்டத்தில் சம்பாதிக்கும் பணம் எல்லாவற்றையும் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.

இதனால் வீட்டில் அவருக்கும் மனைவிக்கும் தகராறு நடந்துள்ளது. கடைசியாக சில தினங்களுக்கு முன்னர் மனைவி இஸ்மாயிலிடம் பணம் கொடுத்து வீட்டுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கிவர சொல்லியிருக்கிறார். ஆனால்  ஜலாலுதீன் அதையும் சூதாட்டத்தில் இழந்துள்ளார். இதனால் மனமுடைந்த அஸ்மா பேகம் இதுபற்றி அவரது சகோதரரிடம் கூறியுள்ளார்.

அவர் தனது சகோதரியைப் பார்க்க வந்தபோது அவர் வீட்டில் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து தடயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.