வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 7 ஜனவரி 2018 (12:38 IST)

தகாத தொழில்: மனைவியை கோடாரியால் வெட்டி கொன்ற கணவன்!!

ஜிம்பாப்வேவில் தகாத தொழிலில் ஈடுபடுவதாக மனைவியை சந்தேகப்பட்ட கணவர், கோபத்தில் மனைவியை கோடாரியால் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஜிம்பாப்வே நாட்டில் உள்ள குபிமா என்ற கிராமத்தில் பாஸ்மோர் ஜம்ஹரோ - தொரோதி தஸ்போரா தம்பதியினர் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கணவருக்கு தன் மனைவி விபச்சார தொழிலில் ஈடுபடுவதாக சந்தேகம் வந்துள்ளது. 
 
இதனால் இருவருக்கும் அடிக்கடி சணடை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பொருமையை இழந்த மனைவி கணவரை பிரிந்து சென்றுவிட்டார். சமீபத்தில், தனது பொருட்களை கொண்டு செல்வதற்காக கணவர் வீட்டிற்கு வந்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 
 
வாக்குவதம் முற்றி தகராறாய் மாற, ஆத்திரமடைந்த கணவர் மனைவியை கோடாரியால் வெட்டி கொலை செய்தார். இதையடுத்து அக்கம் பக்கதார் போலீஸுக்கு புகார் அளிக்க கணவர் தப்பியோடிவிட்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சடலத்தை மீட்டு தலைமறைவாகியுள்ள கணவரை தேடிவருகின்றனர்.