1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 24 ஜனவரி 2019 (18:16 IST)

பெற்ற தாய்க்கு திருமணம் செய்து வைக்கவுள்ள மகன். ; நெகிழ்சியான சம்பவம்

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் வசிக்கும் ஒரு இளைஞர் ,விவாகரத்தான அவரது அம்மாவுக்கு  23  வருடங்கள் கழித்து மறுமணம் செய்து வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இன்று அனைவரும் தங்கள் கருத்துக்களையும் எண்ணங்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த இளைஞரும் தன் @GM 491 என்ற டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். 
 
அதில் என் அம்மாவுக்கு 23 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து ஆனது. இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் அவருக்கு மறுமணம் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடுள்ளார்.

 
'நீங்கள் எல்லோரும் உங்களது பிராத்தனையின் போது என் அம்மாவையும் நினைத்துக் கொள்ளுங்கள், நான் வளர்ந்துவிட்டேன். எனக்கு போதுமான நிதிவசதியும் உள்ளது. அதனால் என் தாய்க்கு திருமணம் செய்து வைக்க இருக்கிறேன்' இவ்வாறு அதில் பதிவிட்டிருக்கிறார்.
 
இந்ந இளைஞரது பதிவிற்கு பலரும் பாராட்டுக்களையும், ஆதரவையும், ,வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.