வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 11 ஜூன் 2019 (17:59 IST)

சிசிடிவியில் பிடிபட்ட ஹாரிபாட்டரின் நண்பன் “டாபி’:வைரலாகும் வீடியோ

விவியன் கோமெஸ் என்ற அமெரிக்கப் பெண்மனி ஒருவர் தன்னுடைய வீட்டின் முன் ”ஹாரி பாட்டர்” திரைப்படத்தில் வரும் “டாபி” என்ற கதாப்பாத்திரம் நடந்து சென்றதாக, தனது முகநூல் பக்கத்தில் சிசிடிவி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.   

ஹாரி பாட்டர் என்ற ஹாலிவுட் திரைப்படம் உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்டது.

இந்த திரைப்படத்தில் “டாபி” என்ற ஒரு விசித்திரமான கதாப்பாத்திரத்தை அனிமேஷன் தொழில்நுட்பம் மூலம் வடிவமைத்திருப்பார்கள். அதனின் உடல் அமைப்பு, மிகவும் ஒல்லியாகவும், குள்ளமாகவும், மூக்கு நீளமாகவும், காது பெரியதாகவும் இருக்கும்.

இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று விவியன் கோமெஸ் என்ற அமெரிக்கப் பெண் ஒருவர்,  தான் அதிகாலை எழுந்தவுடன் தனது வீட்டின் வாசலிலிருந்து ஒரு விசித்திரமான உருவம் வெளியே சென்றதாகவும் அதை தான் சிசிடிவி கேமராவில் பார்த்ததாகவும் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

மேலும் அந்த விசித்திர உருவம் “ஹாரி பாட்டர்” என்ற திரைப்படத்தில் வரும் “டாபி” என்ற உருவம் போல் இருந்ததாகவும், தனது முகநூல் பக்கத்தில் அந்த சிசிடிவி வீடியோவையும் பகிர்ந்திருப்பதாக தெரிய வருகிறது.

விவியம் கொமெஸின் இந்த சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.