வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 அக்டோபர் 2023 (10:33 IST)

ஹமாஸ் கொடூர தாக்குதல்; 7 மணி நேரம் பிணங்களுக்குள் பதுங்கி தப்பிய பெண்!

Hamas
இஸ்ரேலில் ஹமாஸ் படைகள் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் பிணங்களுக்குள் பதுங்கி இளம்பெண் ஒருவர் தப்பித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினை பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில் பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் படையினர் சமீபத்தில் இஸ்ரேல் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தி பல மக்களை சுட்டுக் கொன்றனர்.

நடக்க போகும் அசம்பாவிதத்தை அறியாமல் அப்பகுதியில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அங்கு நுழைந்த ஹமாஸ் படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதுடன், வெடிகுண்டுகளையும் வீசி ஏராளமானோரை கொன்றனர்.

அப்போது அங்கிருந்து லீ சசி என்ற பெண்ணும் மேலும் 30க்கும் மேற்பட்டோரும் தப்பி சென்று வெடிகுண்டு பதுங்குதளம் ஒன்றில் பதுங்கியுள்ளனர். அங்கேயும் வந்த ஹமாஸ் படையினர் அவர்களை கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர். அப்போது ஒருவர் மேல் ஒருவர் இறந்து விழுந்த போது லீ சசி பிணங்களுக்கு இடையே மாட்டிக் கொண்டுள்ளார்.

ஹமாஸ் கும்பலிடம் இருந்து தப்பிக்க பிணங்களோடு பிணமாக கிடந்த அவர் 7 மணி நேரம் போராடி அங்கிருந்து தப்பியுள்ளார். இந்த சம்பவம் கேட்போரை குலைநடுங்க செய்யும் விதத்தில் உள்ளது.

Edit by Prasanth.K