1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (11:25 IST)

முடிகொட்டுதலும் கொரோனாவுக்கு அறிகுறியாக இருக்கலாம் – அதிர்ச்சித் தகவல்!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடி கொட்டுதல் பிரச்சனையும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகளை உலக நாடுகள் அனைத்தும் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு புதிதாக முடி கொட்டுதல் அறிகுறியும் ஏற்படலாம் என indiana University School of Medicine நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும் வாந்தி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட அறிகுறிகள் சொல்லப்பட்டு வரும் நிலையில் இப்போது முடி கொட்டுதலும் இணைந்துள்ளது. ஆனால் இந்த முடிகொட்டுதல் தற்காலிகமானதுதான் எனவும் சொல்லப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்கள்  பயம், மனப்பதட்டம், ஹார்மோன் மாற்றங்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற காரணங்களாலும் முடி கொட்டலாம் எனத் தெரிகிறது.