1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2022 (17:25 IST)

சம்பளம் போதவில்லை: கூகுள் நிறுவன ஊழியர்கள் கூறியதாக சுந்தர் பிச்சை தகவல்!

தங்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதவில்லை என கூகுள் நிறுவன ஊழியர்கள் கூறியுள்ளதாக சிஇஓ சுந்தர் பிச்சை என்று தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நிறுவனத்தில் பணி புரிவதை பெருமையாக உணர்வார்களா? சம்பளம் சம்பள விஷயத்தில் திருப்திகரமாக இருக்கிறதா? என்பது குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது
 
இந்த ஆய்வின் முடிவில் பெரும்பாலான ஊழியர்கள் தங்களுக்கு சம்பளம் போதவில்லை என தெரிவித்துள்ளதாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்
 
மேலும் பதவி உயர்வு விஷயத்திலும் பெரிய அளவில் மகிழ்ச்சி அளிப்பதில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ள தாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது