மூடப்படுகிறது கூகுள் பிளஸ்: காரணம் என்ன?
கூகுள் நிறுவனத்தின் சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ் மூடப்படுவதாகவும் அதன் சேவை முற்றிலும் நிறுத்தப்படுவதாகவும் கூகுள் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற ஒரு சமூக வலைத்தளம் கூகுள் பிளஸ். கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இதில் இந்தியர்கள் உள்பட உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பயனாளிகள் இருந்தனர். இந்த நிலையில் பல்வேறு காரணங்களால் கூகுள் பிளஸ் நிறுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் முக்கிய காரணமாக மக்களின் தகவலை பாதுகாக்கவில்லை என்பதும் ஒரு காரணம் ஆகும்
கூகுள் பிளஸ் பயனாளர்களின் தகவல்களை கூகுள் திருடுவதாக செய்தி வெளியான ஒருசில மணி நேரத்தில் கூகுள் பிளஸ் சேவையை மூடுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது அதன் பயனாளிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.