புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 5 மே 2016 (16:05 IST)

தீ விபத்திலிருந்து காப்பாற்ற குழந்தைகளை தூக்கி வீசிய தாய் : அதிர்ச்சி வீடியோ

தன்னுயை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து, தன்னுடைய மூன்று குழந்தைகளை காப்பாற்ற, ஒரு தாய், ஜன்னல் வழியாக தூக்கி எறுந்து அவர்களை காப்பாற்றிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.


 

 
தென் கொரியாவின் ஒரு நகரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தீ பற்றிக் கொண்டது. மளமளவென தீ அந்த கட்டிடம் முழுவதும் பரவியது. அந்த குடியிருப்பின் ஒர் வீட்டில் தங்கியிருந்த ஒரு தாய் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்.
 
அதற்குள் அங்கே எராளமானோர் சேர்ந்து விட்டனர். அவர்கள், அந்த பெண்ணிடம் குழந்தைகளை முதலில் தூக்கி வீச கூறினர். அதன்படி அவரும் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் ஒருவர் பின் ஒருவராக ஜன்னல் வழியே தூக்கி வீசினார். அதோடு அவரும் கீழே குதித்தார். அதிர்ஷடவசமாக அனைவரும் படுகாயம் இன்றி உயிர் தப்பினர்.
 
இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து தனது சமூகவலைப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...