ஓடும் மின்விசிறியை நாக்கால் நிறுத்தி சாதனை செய்த பெண் - வீடியோ


Murugan| Last Modified புதன், 5 ஏப்ரல் 2017 (17:49 IST)
வேகமாக சுற்றும் மின்விசிறியை தனது நாக்கால் பலமுறை நிறுத்தி ஒரு பெண் சாதனை படைத்துள்ளார்.

 

 
சமீபத்தில் இத்தாலி நாட்டில் லோ ஷோ தி ரிக்கார்டு என்கிற உலக சாதனைக்கான நிகழ்ச்சி நடந்தது. அதில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த சொயி எல்லிஸ் என்ற பெண் கலந்து கொண்டு 35 வாட்ஸ் திறன் கொண்ட இரண்டு மின்விசிறிகளை தொடர்ந்து 16 முறை தனது நாக்காலே நிறுத்தி சாதனை செய்தார். இரண்டு மின்விசிறி என்பதால், மொத்தம் 32 முறை நாக்கால் நிறுத்தி அங்கிருந்தவர்களை ஆச்சர்யப்படுத்தினார்.
 
இதற்கு முன் நிமிடத்திற்கு 20 முறை என்பது மட்டுமே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார். இதில் முக்கிய விவகாரம் என்னவெனில், வேகமாக சுழலிய பேனை நிறுத்தியதில் அவருடைய நாக்கிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுதான்....
 
வீடியோ உங்கள் பார்வைக்கு...
 


இதில் மேலும் படிக்கவும் :