வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2015 (19:06 IST)

'கற்பழிப்பு நாடு' என இந்திய மாணவருக்கு பயிற்சி அளிக்க மறுத்த ஜெர்மன் பேராசிரியை மன்னிப்பு கோரினார்

இந்தியாவில் பலாத்கார சம்பவங்கள் அதிகமாக நடப்பதால், இந்திய மாணவர் ஒருவருக்கு பயிற்சி  அளிக்க ஜெர்மன் பல்கலைக்கழக பேராசிரியை மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
ஜெர்மனியின் லெய்ப்ஜிக் பல்கலைக்கழக பேராசிரியை அன்னிட்டி பெக்சிங்கரிடம் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற இந்திய மாணவர் ஒருவர் விண்ணப்பித்திருந்தார்.
 
அவருக்கு பதில் அளித்த பேராசிரியை, இந்தியாவில் பலாத்காரங்கள் அதிகம் நடப்பதால், இந்திய மாணவருக்கு பயிற்சி அளிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
 
பேராசிரியை ”எனது குழுவில் பல பெண் மாணவர்கள் உள்ளனர். அதனால், "நான் இதை ஆதரிக்க முடியாது என்றே நினைக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.
 
அந்தக் கடிதத்தை மாணவர், டெல்லியில் உள்ள ஜெர்மன் தூதருக்கு அனுப்பியுள்ளார். இது குறித்து ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரகம் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய ஜெர்மன் தூதர் மிக்சைல் ஸ்டெய்னர் தனது  கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து பேராசிரியை அன்னிட்டிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மிக்சைல் ஸ்டெய்னர் கூறியிருப்பதாவது:-
 
நாம் தெளிவாக இருக்க வேண்டும்; இந்தியா கற்பழிப்பவர்களின் நாடு அல்ல, நமது நாட்டை பற்றி மேலும் அறிய நாம் மேலும் ஊக்கபடுத்த வேண்டும். இந்தியாவில் அதிகம் திறந்த மனநிலை மனிதர்கள். நீங்கள் உங்கள் எண்ணத்தை மாறிக் கொள்ள வேண்டும். இது என் கருத்து குறிப்பாக பொருத்தமற்று எண்ணும் பேராசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.
 
பின்னர் இதற்கு பேராசிரியை மன்னிப்பு கோரினார்.
 
எனது ஆய்வகத்தில் தற்போது 2 இந்திய மாணவர்கள் உள்ளனர். நான் ஏற்கனவே நான்கு பேருக்கு பயிற்சி அளித்துள்ளேன். இந்திய  மாணவர்களுக்கு எதிராக நான் எப்போதும் இல்லை. சிரமத்திற்காகவோ அல்லது தவறாக புரிந்து கொண்டதற்காகவோ நான் மன்னிப்பு கோருகிறேன் என பேராசிரியை தனது மெயிலில் தெரிவித்துள்ளார்.
 
நான் தவறு செய்து விட்டேன் . யாரையாவது புண்படும் படி பேசி இருந்தால் ஓவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறி இருந்ததாக இந்திய ஜெர்மன் தூதரக இணையதளம் தெரிவித்துள்ளது.