வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 5 மே 2015 (08:32 IST)

காசா யுத்தம்: இஸ்ரேல் இராணுவம் குறித்து புதிய கேள்விகள்

கடந்த ஆண்டு காசா யுத்தத்தில் இஸ்ரேலிய இராணுவத்தினர் நடந்து கொண்டவிதம் குறித்து புதிய கேள்விகள் எழுந்துள்ளன.


இஸ்ரேலிய செயற்பாட்டாளர்கள் குழுவொன்று அறுபதுக்கும் அதிகமான இஸ்ரேலிய இராணுவச் சிப்பாய்களிடமிருந்து பெற்ற வாக்குமூலங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆவணம் ஒன்றிலேயே இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
 
அந்த மோதலில் பங்கேற்ற இஸ்ரேல் இராணுவத்தினரிடமிருந்து, எட்டு மாதங்களாக சேகரிக்கப்பட்ட சான்றுகளை வைத்து breaking the silence எனும் அந்த செயல்பாட்டுக் குழு இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.
 
இந்த காசா யுத்தம் குறித்து முன்பு இஸ்ரேலிய அரசு தெரிவித்திருந்த அதிகாரப்பூர்வ கருத்துகளுக்கு மாறுபட்டதாக இந்த அறிக்கை இருக்கிறது.
 
காசா போரின்போது பொதுமக்களின் உயிரிழப்புகளையும், சொத்துக்களின் சேதங்களையும் தவிர்க்க தங்களால் ஆன அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன என்று இஸ்ரேல் தொடர்ந்து அழுத்தம் திருத்தமாகக் கூறிவந்தது.
 
ஆனால் இந்த அறிக்கையில் மேற்கோள்காட்டப்பட்டுள்ள இராணுவத்தினர் போர் நியமங்களுடன் நடந்துகொள்ளவில்லை அல்லது கவனக்குறைவாக இருந்தனர் என்று தம்மிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனினும் இஸ்ரேலிய இராணுவமோ breaking the silence அமைப்பினர் தம்மிடம் இருக்கும் தகவல்களை பகிர்ந்துகொள்ள மறுத்துவிட்ட காரணத்தால், உரிய பதிலை தங்களால் அளிக்க முடியவில்லை என்று கூறுகிறது.