1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2019 (19:27 IST)

இன்று முதல் ஃபேஸ்புக்கில் நியூஸ்: மக்களின் ஆதரவை பெறுமா?

செய்தி நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் இன்று முதல் ஃபேஸ்புக்கிலும் செய்திகள் வெளியாக தொடங்கியுள்ளது முதற்கட்டமாக அமெரிக்காவில் ஆரம்பமாகும் இண்ட ஃபேஸ்புக் நியூஸ் சேவை விரைவில் இந்தியா உள்பட இதர நாடுகளுக்கும் விரிவாக்கப்பட உள்ளதாக ஃபேஸ்புக் தயாரிப்பு மேலாளர் கேம்ப்பெல் ப்ரவுன் தெரிவித்துள்ளார்.
 
ஃபேஸ்புக் நியூஸ் தளத்தில் யூஎஸ்ஏ டுடே, தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், டைம், தி வாஷிங்டன் போஸ்ட், பஸ்ஃபீட் நியூஸ் ஆகிய பதிப்பாளர்கள் பதிவு செய்யும் செய்திகள் அவ்வபோது அப்டேட் என்றும், வணிகம், பொழுதுபோக்கு, அறிவியல், தொழில்நுட்பம், ஆரோக்கியம் மற்றும் விளையாட்டு ஆகிய பிரிவுகளில் செய்திகள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் ஆப்பிள் போன்று ஃபேஸ்புக் நியூஸ் பகுதி மனிதர்களால் மேனுவலாகவே இயக்கப்பட உள்ளதால் இன்றைய முக்கிய செய்திகள் சுவாரஸ்த்துடன் இருக்கும் என்றும் ஒவ்வொரு நொடியும் பயனாளர்கள் உடனுக்குடனான செய்திகளைக் காண முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் செய்திக்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு அளிப்பார்கள் என்றே கருதப்படுகிறது