பிரான்ஸ் அதிபர் மேல் கடுப்பில் இஸ்லாமிய நாடுகள்! – பயணிகளுக்கு எச்சரிக்கை!

Prasanth Karthick| Last Modified புதன், 28 அக்டோபர் 2020 (08:13 IST)
பிரான்சில் முகமது நபிகள் கார்டூனை வைத்து பாடம் நடத்திய ஆசிரியர் கொல்லப்பட்ட நிலையில் இஸ்லாமிய நாடுகளில் உள்ள பிரான்ஸ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் முகமது நபியின் கார்ட்டூன் சித்திரத்தை வைத்து சமத்துவம் குறித்து பாடம் நடத்திய ஆசிரியர் தலை வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் “இது இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்” என கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து பிரான்ஸ் அதிபருக்கு எதிராக பாகிஸ்தான், இரான், அரபு நாடுகள் உள்ளிட்டவை கடும் எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் அந்நாடுகளில் உள்ள பிரான்ஸ் பிரஜைகள் பாதுகாப்பாக இருக்கும்படி பிரான்ஸ் எச்சரித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :