64 வயது பெண்ணை திருமணம் செய்த 39 வயது பிரான்ஸ் அதிபர் வேட்பாளர்..
பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இமானுவேல் மேக்ரன்(39), தன்னை விட 25 வயது மூத்த தனது ஆசிரியரையே திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் மேக்ரன். இவருக்கு வெற்றி பிரகாசமாக இருப்பதாக அந்த நாட்டு பத்திரிக்கைகள் எழுதி வருகின்றனர்.
இந்நிலையில், அவர் பிரிஜ்ஜெட் ட்ரானெக்ஸ் என்ற 64 வயது பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். மேக்ரன், 17 வயதில் உயர் நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, அவரின் ஆசிரியாக பிர்ஜ்ஜெட் இருந்துள்ளார். எனவே, அவரையே திருமனம் செய்து கொள்வேன் என மேக்ரன் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், பிரிஜ்ஜெட் அப்போது அதை நம்பவில்லை.
அதன்பின் அவருக்கு திருமணமாகி அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மேலும், அவரின் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டார். எனவே, தற்போது அவரை மேக்ரன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.