1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 பிப்ரவரி 2021 (10:27 IST)

செல்போன் வழியாக கொரோனா பரிசோதனை! – பிரான்ஸில் புதிய முயற்சி!

உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் செல்போன் மூலமாக கொரோனா சோதனை செய்யும் முறையை பிரான்ஸ் கண்டறிந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் பிரான்ஸில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பிரான்சின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் செல்போன் மூலம் கொரோனா தொற்றை கண்டறிய புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளனர். இதன்மூலம் சளி மாதிரி பரிசோதிக்கும் கருவி ஒன்றை செல்போனுடன் பொருத்தினால் அதன் மூலம் கொரோனா தொற்றை கண்டறிய இயலும் எனவும், சோதனையில் 90% சரியான முடிவுகளை இது அளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.