1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 7 மே 2016 (13:10 IST)

ஒலிம்பிக் குத்துச்சண்டை சாம்பியனை, ரத்தம் ஒழுக குத்துவிட்ட போலிஸ் [வீடியோ]

ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற உக்ரைன் நாட்டு வீரரை காவல் துறையினர் கடுமையான முறையில் தாக்கி கைது செய்துள்ளனர்.
 

 
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த வியாசெஸ்லவ் ஒலிவ்னிக், கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர். இவர் கடந்த புதன்கிழமை கீவ் நகரில் தனது 50ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
 
அப்போது அவர் காரில் சென்றுள்ளார். அங்கே சோதனையிட்டுக் கொண்டிருந்த காவல் துறையினர், குடித்துவிட்டு காரை ஓட்டுவதாக சந்தேகத்தன் பேரில் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால், வியாசெஸ்லவ் காவல் துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
 
பின்னர் சிறிது நேரத்தில், அவர் காவல் துறையினரை தாக்க முற்பட்டார். இதனையடுத்து, வியாசெஸ்லவ் மீது பெப்பர் ஸ்ப்ரே அடித்தும், தங்கள் கைத்தடிகள் மூலமும் தாக்கினர். இதில் வியாசெஸ்லவ் முகத்தில் காயம் ஏற்பட்டது. மேலும், முகத்தில் இருந்து ரத்தம் ஒழுகியது.
 
தனது முகத்தில் இருந்து ரத்தம் ஒழுகுவதை கண்டதும் ஆத்திரமடைந்த வியாசெஸ்லவ் காவலர்கள் மீது அடிக்கப் பாய்ந்தார். இதனால், வேறு வழியின்றி அவரை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

வீடியோ இங்கே: