வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2017 (17:27 IST)

திருமணத்திற்கு முன்னரே உடலுறவு: கர்ப்பமானதால் கைது செய்த காவல்துறை

திருமணத்திற்கு முன்னரே உடலுறவு: கர்ப்பமானதால் கைது செய்த காவல்துறை

அரபு நாடான அபுதாபியில் திருமணத்திற்கு முன்னர் ஒரு பெண் கர்ப்பமானதால் அவரையும், அவரது கர்ப்பத்துக்கு காரணமான அவரது காதலரையும் அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.


 
 
அபுதாபி நாட்டு சட்டப்படி திருமணத்திற்கு முன்னர் உடலுறவு கொள்வது குற்றமாகும். இந்த சட்டம் அந்த நாட்டில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கும் பொருந்தும்.
 
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த எம்லின் என்பவர் அவரது காதலியான உக்ரை நாட்டை சேர்ந்த இரினாவுடன் சேர்ந்து அபுதாபியில் சேர்ந்து வேலை பார்த்து வந்தார். சில நாட்களுக்கு முன்னர் இரினாவுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்தார் எம்லின்.
 
அவரை பரிசோதித்ததில் அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவர அந்த காதல் ஜோடியிடம் திருமண சான்றிதழ் கேட்டுள்ளனர் மருத்துவர்கள். அவர்கள் தாங்கள் காதலர்கள் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என கூறினர்.
 
அபுதாபி சட்டத்திற்கு விரோதமாக திருமணத்திற்கு முன்னரே அவர்கள் இருவரும் உடலுறவு கொண்டதால் மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறை அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.