வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2017 (05:22 IST)

காஞ்சிபுரம் ரெளடி கம்போடியவில் தற்கொலை செய்தது ஏன்?

ஆள்கடத்தல், கொலை, கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு தமிழக காவல்துறையினர்களால் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரெளடி, கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



 
 
காஞ்சிபுரத்தை அடுத்த திருப்பருத்திக்குன்றத்தை சேர்ந்தவர் ஶ்ரீதர் தனபால் என்பவர் மீது பல வழக்குகள் இருக்கும் நிலையில் ஜாமீனில் வெளிவந்து வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் ஸ்ரீதரின் மனைவி, சகோதரர் உள்பட அவரது உறவினர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ஒருசில உறவினர்களிடம் தலைமறைவாகியுள்ள ஸ்ரீதர் எங்கே என்று போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் கம்போடியாவில் ஸ்ரீதர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது விசாரணையில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.