செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 23 செப்டம்பர் 2019 (16:42 IST)

ப்ளாக் லிஸ்டில் சேர்க்கப்படுகிறதா பாகிஸ்தான்?

தீவிரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்க அளித்த வாக்குறுதிகளை செயல்படுத்தாத காரணத்தால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 
 
தீவிரவாதிகளுக்கு நிதி கிடைக்காமல் தடுக்க முன்வைத்த 27 செயல் திட்டங்களில் ஆறை மட்டுமே பாகிஸ்தான் செயல்படுத்தி உள்ளது. தற்போது பாகிஸ்தான் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் க்ரே பட்டியலில் உள்ளது. 
 
இந்நிலையில், தீவிரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்க அளித்த வாக்குறுதிகளை பாகிஸ்தான் இன்னும் நிறைவேற்றியதாக  தெரியவில்லை. இதனால் பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. 
 
இது குறித்து பாகிஸ்தன தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, ஐநா-வால் சர்வதேச தீவிரவாதிகளாக பிரகடனம் செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்டோரில் 5 பேர் மட்டும் தங்களது நாட்டில் இருக்கின்றனர். 
 
அந்த 5 பேரில், லஷ்கரே - தொய்பா, ஜமாத் உத் தவா அமைப்புகளின் தலைவர் ஹபீஸ் முகமது சயீதும் ஒருவர் ஆவார். இந்த விவகாரம் தொடர்பாக 900 வகை சொத்துக்களை முடக்கியிருப்பதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.