1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (15:56 IST)

பிரபல டிக்-டாக் பெண் சுட்டுக்கொலை..! ஈராக்கில் பயங்கரம்..!!

Girl Shoot Out
ஈராக்கில் பிரபல டிக் டாக் பெண் ஒருவர், மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மரணம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
 
ஈராக் நாட்டின் கிழக்கு பாக்தாத் நகரில் ஜோயூனா மாவட்டத்தில் வசித்து வந்தவர் குப்ரான் சவாதி. இவர் ஓம் பகத் என்ற பெயரில் டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார்.  சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டிக்-டாக்கில் இவரை  பின்பற்றுகின்றனர். இந்தநிலையில், குப்ரான் சவாதி என்ற இயற்பெயர் கொண்ட ஓம் பகத், அவரது வீட்டிற்கு அருகே காரின் உள்ளே அமர்ந்து இருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தலைமறைவானார். ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து குப்ரான் சவாதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த தாக்குதலில் மற்றொரு பெண் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. குப்ரான் சவாதி  மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என ஈராக் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 
நாட்டின் கலாசாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் டிக்-டாக் மூலம் வீடியோக்களை பதிவேற்றிய குற்றச்சாட்டின் பேரில் குப்ரான் சவாதிற்கு கடந்த ஆண்டு ஈராக் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.