1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2022 (19:00 IST)

அமெரிக்க அரசுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் எச்சரிக்கை: என்ன காரணம்?

facebook
அமெரிக்காவில் பத்திரிக்கை மசோதா விரைவில் நிறைவேற்றப்படவுள்ளதாக கூறப்படும் நிலையில் பத்திரிகை மசோதாவை நிறைவேற்றினால் பேஸ்புக்கில் செய்திகள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்வோம் என பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் மிரட்டல் விடுத்துள்ளது.
 
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பத்திரிகை மசோதா சட்டம் நிறைவேறியது என்பதும் அதன் பின் அந்நாட்டிடம் ஃபேஸ்புக் ஒப்பந்தம் செய்து கொண்டு தனது முடிவை மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அமெரிக்காவில் பத்திரிகை மசோதா நிறைவேற்றப்பட்டால் சமூக ஊடகங்கள் அமெரிக்காவின் உள்ளூர் செய்திகள் ஆக மாறும் என்றும் அதன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர் 
 
இந்த நிலையில் பத்திரிகை மசோதாவை நிறைவேற்றினால் முகநூலில் செய்திகள் அனைத்தையும் வெளியிடுவதை நிறுத்தி விடுவோம் என பேஸ்புக் நிறுவனம் மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran