1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 7 நவம்பர் 2016 (20:03 IST)

ஃபேஸ்புக் பயன்பாடு ஆயுளை அதிகரிக்கும்: ஆய்வு தகவல்

ஃபேஸ்புக் பயன்பாடுகளை அதிக அளவில் கொண்டிருப்பவர்களின் ஆயுள் அதிகரிக்கும் என்று அமெரிக்காவின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
ஃபேஸ்புக் பயன்பாடு தீமையை அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவித்தது. இதனால் பொதுமக்கள் ஃபேஸ்புக் பற்றி பயத்திலேயே இருந்து வந்தனர். சமூக வலைத்தளம் என்றால் பெரும்பாலான மக்கள் அதிருப்தியை தெரிவித்து வந்தனர்.
 
இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அண்மையில் நடத்திய ஆய்வு மக்களுக்கு மீண்டும் மகிழ்ச்சி அளித்துள்ளது. இதன்மூலம் மக்கள் சற்றும் சந்தோஷம் அடைந்துள்ளனர்.
 
அதாவது, ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களை விட, பயன்படுத்தாதவர்கள் மரணமடைவதற்கான வாய்ப்பு 12 சதவீதம் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் பயன்பாடு மக்களின் ஆயுளை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதன்மூலம் ஃபேஸ்புக் பயனாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.