வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 26 ஜூலை 2017 (18:38 IST)

பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம்...

பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து விடுதலை புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கியுள்ளது.


 

 
பயங்கரவாத செயல்களில்  ஈடுபடுவதாக கூறி கடந்த 2006ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் அமைப்பிற்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. இதை எதிர்த்து புலிகளின் அமைப்பின் சார்பில் 2011ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அதில், 2009ம் ஆண்டிற்கு பின் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தவில்லை எனவும், வன்முறையற்ற வழிகளில் மட்டும் அவர்கள் போராட விரும்புகின்றனர் எனவும் வாதிக்கப்பட்டது.
 
இந்நிலையில், விடுதலைப் புலிகளின் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் இன்று நீக்கி உத்தரவிட்டுள்ளது.