1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (10:25 IST)

இங்கிலாந்தில் புதிதாக 71 பேருக்கு குரங்கு அம்மை! – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Monkeypox
உலகம் முழுவதும் பல நாடுகளில் குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் இங்கிலாந்தில் மேலும் 71 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்போது புதிதாக தோன்றியுள்ள குரங்கு அம்மை அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த குரங்கு அம்மை வேகமாக பரவி வருகிறது.

இங்கிலாந்தில் தற்போது மேலும் 71 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் இங்கிலாந்தில் மொத்த பாதிப்பு 179 ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பெரிய அம்மை தடுப்பூசியை குரங்கு அம்மை பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு செலுத்துவதற்காக அந்நாட்டு சுகாதாரத்துறை தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.