1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 17 ஜூன் 2020 (08:37 IST)

கொரோனா வைரஸுக்கு உயிர் காக்கும் மருந்து கண்டுபிடிப்பு!

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பலர் இறந்து வரும் நிலையில் உயிர் காக்கும் மருந்தாக ஸ்டீராய்டு செயல்படுவதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா தொற்றை குணப்படுத்த மருந்துகள், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணியில் பல நாட்டு விஞ்ஞானிகளும் மூழ்கியுள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு முழுமையான மருந்து கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் சில மருந்துகள் நோயை கட்டுப்படுத்த பயன்படுகின்றன. அந்த வகையில் டெக்ஸாமெதோசான் என்ற ஸ்டீராய்டு மருந்து கொரோனா இறப்பு விகிதங்களை குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரெகவரி என்னும் இங்கிலாந்து தலைமையிலான மருத்துவ பரிசோதனை குழு இந்த மருந்தை நோயாளிகளிடம் பயன்படுத்தியில் மூன்றில் ஒரு பங்கு பேர் இறப்பிலிருந்து மீண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.