வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 செப்டம்பர் 2020 (08:25 IST)

என்ன பண்ணுனாலும் கொரோனா போக மாட்டேங்குதே! – மீண்டும் இங்கிலாந்தில் பொதுமுடக்கம்

கொரோனா பாதிப்பிலிருந்து உலக நாடுகள் மெல்ல மீண்டு வரும் சூழலில் இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சில நாடுகளில் கொரோனா பாதிப்புகள் ஓய்ந்தாலும் பல நாடுகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இரண்டாவது கொரோனா அலை உருவாக வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்த நிலையில் இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

கடைகள், அங்காடிகள் செயல்படும் நேரத்தை குறைத்துள்ள அவர், அலுவலக பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றவும், பள்ளிகள், கல்லூரிகளை சமூக இடைவெளியுடன் நடத்தவும் கூறியுள்ளார்.