1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 29 நவம்பர் 2022 (15:11 IST)

ஆப்பிள் நிறுவனம் மிரட்டுகிறது: எலான் மஸ்க் டுவிட்

Elon mUsk
ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய டுவிட்டர் நிறுவனத்தை மிரட்டுகிறது என எலான் மஸ்க் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இதுகுறித்து டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரிலிருந்து டுவிட்டரை நிறுத்தி நிறுத்தி வைப்பதாக மிரட்டல் விடுத்து வருவதாகவும் ஆனால் அதே நேரத்தில் அதனை ஏன் தங்களிடம் அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் 
 
ஆப்பிள் நிறுவனம் டுவிட்டருக்கு மிரட்டல் வருவதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் தங்கள் ஆப் ஸ்டோரில் இருந்து டுவிட்டரை நீக்கினால் ஆப்பிள் போனுக்கு மாற்றாக புதிய ஐபோனை தயாரிப்பேன் என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran