வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 27 நவம்பர் 2022 (09:38 IST)

ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்களுக்கு பதிலாக புதிய ஸ்மார்ட்போன்: எலான் மஸ்க் அறிவிப்பு

Elon musk
ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்களது பிளே ஸ்டோரில் இருந்து ட்விட்டரை அகற்றினால் புதிய ஸ்மார்ட்போன் உருவாக்குவேன் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ட்விட்டர் அகற்றப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் இதுகுறித்து எச்சரிக்கை கருத்து தெரிவித்துள்ளார்
 
ஆப்பிள் மற்றும் கூகுள் தங்களது ஆப் ஸ்டோரிலிருந்து ட்விட்டரை நீக்கினால் சொந்தமாக ஸ்மார்ட்போன் தயாரிப்பேன் என்றும், ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களை விட்டு மக்கள் வெளியேறும் நிலையை கொண்டு வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டுகளை உருவாக்குவதை விட ஸ்மார்ட்போன் உருவாக்குவது எனக்கு எளிதுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva