1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 2 டிசம்பர் 2022 (19:13 IST)

மனித மூளையில் சிப் வைத்து கணிணி மூலம் இயக்கும் எலான் மஸ்க்!

HUMAN MIND CHIP
விரைவில் மனித மூளையில், எலான் மஸ்க் சிப் பொருத்த உள்ளதாக தகவல் வெளியாகிறது.

உலக முன்னணி பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் எலான் மஸ்க்.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் ஆகிய  நிறுவனங்களின்  தலைவராக இருப்பவர் எலான் மஸ்க். 

இவர், கார் தொழில்நுட்பத்துறையில் சாதனை படைத்துள்ளதைப் போன்று, மனிதர்களின் மூளையில் சிப்பை பொறுத்தி அதை கணிணியின் மூலம் இயங்க வைக்கஉள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்த நிலையில்,  இதை உறுதிப்படுத்தும் வகையில், மனித மூளைக்குள் சிப் பொருத்தி, அதனை கணிணியுடன் இணைத்து மனதில் நினைப்பதை  கணிணி மூலம் செயல்படுத்துவதை எலான் மஸ்க். விரைவில் மனிதர்களுக்கு சோதனை   நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதற்கு விமர்சனங்கள் குவிந்தாலும், அறிவியல் ஆர்வலர்கள் இதற்கு வரவேற்பு அளித்த வண்ணம் உள்ளனர்.

Edited by Sinoj