செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 10 செப்டம்பர் 2020 (17:58 IST)

பேட்டரி, சுத்திகரிப்பான்களுடன் வருகிறது எலக்ட்ரானிக் மாஸ்க்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலக சுகாதார மையம் முதல் உள்ளூர் சுகாதார அமைச்சகம் வரை மாஸ்க் அணிய வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்பதும் இந்தியா உட்பட பல நாடுகளில் மாஸ்க் அணியாமல் வெளியேறும் பொதுமக்களுக்கு அபராத தொகை விதிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் இந்த மாஸ்க் அணியும் விவகாரம் என்பது இன்னும் நீண்ட மாதங்களுக்கு இருக்கும் என்றும் ஒருவேளை நிரந்தரமாக்கபட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மாஸ்குகளின் தரம் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனமொன்று எலக்ட்ரானிக் மாஸ்க் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது
 
இந்த மாஸ்க்கில் காற்றில் இருக்கும் மாசு சுத்தம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாஸ்க்கை நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம் என்றும் பேட்டரியுடன் இயங்கும் இந்த மாஸ்க்கில் சுத்திகரிப்பான்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த சுத்திகரிப்பான் உள்ளே வரும் காற்று மற்றும் வெளியேறும் காற்றையும் தூய்மையாக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது பேட்டரியின் வேகத்தையும் சுவாசத்திற்கு ஏற்பவும், சுத்திகரிப்பு வேகத்தையும் மாற்றிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாஸ்க் உலகம் முழுவதும் மிக விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது