புவி நேரம்: இன்று இரவு 8:30 முதல் 9;30 வரை மின்விளக்குகளை அணைக்க WWF அமைப்பு வேண்டுகோள்
புவி நேரத்தையொட்டி இன்று இரவு 8:30 முதல் 9;30 வரை மின்விளக்குகளை அணைக்க WWF அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
புவிவின் காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்ற சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றி உலக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமை அன்று புவி நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு 35 நாடுகள் புவிநேரத்தைக் கடைப்பிடித்த நிலையில், தற்போது, உலகம் முழுவதும் 190 நாடுகளில் புவி நேரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
புவி நேரத்தின்போது, அவசியமில்லா விளக்குகளை ஒரு மணி நேரம் அணைத்து வைக்கும் நிகழ்வாகும். இதன் மூலம் மின்சாரத்தைச் சேமிக்கவும், புவி வெப்பமயவாதைத் தடுக்கும்கடமை ஒவ்வொரு மக்களுக்கும் உண்டாகிறது.
இந்த நிலையில், இன்று இரவு 8:30 முதல் 9;30 வரை மின்விளக்குகளை அணைக்க WWF அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.