புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 9 மார்ச் 2020 (20:09 IST)

மலேசிய நாட்டின் அமைச்சராகும் தமிழருக்கு வைரமுத்து வாழ்த்து

மலேசிய நாட்டின் அமைச்சராகும் தமிழருக்கு வைரமுத்து வாழ்த்து
மலேசிய நாட்டின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் டத்தோஸ்ரீ சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று கவியரசு வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
 
மலேசிய பிரதமர் மஹாதீர் முகமது சமீபத்தில் ராஜினாமா செய்த நிலையில் புதிய பிரதமராக முகைதீன் யாசின் என்பவர் கடந்த வாரம் பதவியேற்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் முகைதீன் யாசின் தனது புதிய அமைச்சரவை பட்டியலை சற்றுமுன் வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில் தமிழரான டத்தோஸ்ரீ சரவணன் அவர்களுக்கு மனித வள மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது
 
இதனையடுத்து மனித வள மேம்பாட்டுத் துறை அவர்களின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கவியரசு வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மலேசியத் திருநாட்டின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகிறார் டத்தோஸ்ரீ சரவணன். திருக்குறள் அதிகாரம் போல் அவர் ஆட்சி அதிகாரம் சிறக்க வாழ்த்துகிறேன்.