திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (08:26 IST)

ஊரடங்கால் வேலையில்லை: 32 ஆயிரம் விமான ஊழியர்கள் சஸ்பெண்ட்

32 ஆயிரம் விமான ஊழியர்கள் சஸ்பெண்ட்
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் இருந்து வரும் நிலையில் உலகின் கிட்டத்தட்ட பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் விமான ஊழியர்கள் அனைவரும் தற்போது வேலை இல்லாமல் வீட்டில் தான் இருக்கின்றனர். இதனையடுத்து உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டிஷ் ஏர்வேஸ் அதிரடியாக தனது நிறுவனத்தின் ஊழியர்கள் 32 ஆயிரம் பேர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான குழு உறுப்பினர்கள், பொறியாளர்கள், தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், உள்பட 32 ஆயிரம் பேர்களை தற்காலிக பணி நீக்கம் செய்யப் படுவதாகவும் விமானம் இயங்கத் தொடங்கியவுடன் அவர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது 
 
சஸ்பெண்ட் செய்யப்படாலும் சஸ்பெண்ட் ஆன ஊழியர்களுக்கு 80% வரை சம்பளம் தரஏற்பாடு செய்யப்படும் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது