செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By

கொரோனாவில் இருந்து குணமாகியும் 7வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த இளைஞன்: பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 26 வயது இளைஞர் சிகிச்சை எடுத்து குணமாகியும் மன அழுத்தம் காரணமாக 7வது மாடியிலிருந்து குதித்து  ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கேரளாவை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் துபாயில் பணி செய்து கொண்டிருந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மே 10ஆம் தேதி அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்ததால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் 
 
இந்த நிலையில் கொரோனாவில் இருந்து குணமாகிய பின்னரும் அவர் தனது நண்பர்களுடன் அறையில் தங்கியிருந்த போது மன அழுத்தம் காரணமாக நண்பர்களுடன் பேசாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து திடீரென நேற்று காலை அவர் ஏழாவது மாடியில் உள்ள தனது அறையினில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
 
இதுகுறித்து போலீசார் அவர் தங்கியிருந்த அறையில் உள்ள அவரது நண்பர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்த மரணம் தற்கொலை தான் என்பதை துபாய் போலீசார் உறுதி செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது