1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 26 செப்டம்பர் 2016 (12:40 IST)

சாலை விபத்துகளை தவிர்க்க ‘ஸ்மார்ட்போன் ஆப்’

சாலை விபத்துகளை கட்டுப்படுத்தவும், சாலை விபத்துகளின் மூலம் உயிரிழப்பு ஏற்படாமல் இருக்கவும் ‘டிரைவிங் பாரிஸ்டா’ என்ற ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


 

 
ஜப்பான் நாட்டில் கடந்த சில வருடங்களாக சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் மொபைல் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதனால் ‘டிரைவிங் பாரிஸ்டா’ என்ற ஸ்மார்ட்போன் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப், வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
 
வாகனம் ஓட்டும்போது தொடர்ச்சியாக 100 கி.மீ. தூரம் செல்போனைப் பார்க்காமல் ஓட்டிவிட்டால், சூடான காபியோ, குளிர்ந்த காபியோ கொமெடா காபி கடைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
 
இந்த புதிய ஆப் குறித்து டொயோட்டோ நிர்வாக அதிகாரி கூறியதாவது:-
 
சாலைப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன். இந்த முயற்சிக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைக்கும் பட்சத்தில், சாலை விபத்துகள் இல்லா பயணத்தை உறுதிப்படுத்தலாம் என்று கூறினார்.