1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 11 ஜூன் 2017 (11:08 IST)

தெரசா மேவுக்கு ஆதரவு தரும் டொனால்ட் டிரம்ப்!!

இங்கிலாந்தில் மைனாரிட்டி ஆட்சி அமைக்கவிருக்கும் பிரதமர் தெரசா மேவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். 


 
 
இங்கிலாந்தில் மொத்தம் உள்ள 650 இடங்களில் 318 இடங்களில் மட்டுமே தெரசா மேவின் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றது.  
 
இதனால் 10 இடங்களை வென்ற ஜனநாயக தொழிற்சங்க கட்சியுடன் சேர்ந்து இங்கிலாந்தில் பிரதமர் தெரசா மே கூட்டணி ஆட்சி அமைக்கிறார். 
 
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இருதரப்பு உறவை மேம்படுத்துதில் தங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்க்கிறேன் என கூறி தெரசா மேவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.