1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 2 அக்டோபர் 2016 (10:44 IST)

ஆபாச படத்தில் நடித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்

ஆபாச படத்தில் நடித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்

விரைவில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், போட்டியிடும் வேட்பாளரான டொனல்ட் டிரம், ஆபாச படத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


 

 
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசு ஜனநாயக கட்சி வேட்பளராக ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். தற்போது அவர்கள் இருவரும் அனல் பறக்கும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில் அவர்கள் இருவரையும் பற்றி நாளுக்கு நாள் ஒவ்வொரு தகவல் வெளியாகி வருகிறது. அதுவும் டொனல்ட் டிரம்ப் பற்றி வெளியாகியுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 2000ம் ஆண்டு, சென்டர்போல்டு என்ற பெயரில் வெளியான ஒரு ஆபாச படத்தில அவர் நடித்துள்ளார் என்பதுதான் அந்த தகவல்.
 
ஆனால், அவர் சம்பந்தப்பட்ட உடல் உறவு காட்சிகள் எதுவும் அந்த வீடியோவில் இல்லை. அதில் அவர் நியூயார்க் நகரில் உள்ள ஒரு சாலையில் நின்று, ஒரு மது (சேம்பைன்)பாட்டிலை திறந்து அதில் இருந்து வெளியேறும் நுரையை அருகிலிருக்கும் ஆண்கள் மீது தெளிப்பது போல் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
 
அதன் பின் அந்த வீடியோ, பெண்கள் நிர்வாணாக தோன்றி நடனம் ஆடுவது போலவும், குளிப்பது போலவும் பதிவாகியுள்ளது. இந்த விவகாரம் டொனல்ட் டிரம்பிற்கு எந்த அளவு தலைவலியை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.