சூரியன் இப்படித்தான் இருக்குமா ? நுண்ணோக்கி எடுத்த வைரல் படம் !
பூமிக்கு ஒளி தரும் சூரியனின் தோற்றம் தூரத்தில் இருந்து நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், அதன் மேற்பரப்பு இதுவரை யாராலும் படம் பிடிக்கப்படவில்லை. இந்நிலையில் ஒரு நவீன் நுண்ணோகியின் மூலம் சூரியனிம் மேற்தொகுதியைப் படம் பிடித்துள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் பிரசித்தி பெற்று விளங்கும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தேசிய அறிவியல் அமைப்பு சூரியனின் மேற்பரப்பை இதுவரை யாரும் படம் எடுக்காத வகையில் ஒரு புதிய படத்தை வெளியிட்டுள்ளது.
இந்தப்படம் சூரியன் கொந்தளிப்பதன் பிளாஸ்மா வடிவத்தைக் காட்டுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், சூரியனின் புதிய மேற்பரப்பு படத்தை கொண்டு நெட்டிசன்ஸ் பல்வேறு மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர். அதில், சூரினின் மேற்பரப்பு கடலை மிட்டாய் போன்று உள்ளது என தெரிவித்துள்ளனர்.