குழந்தை வேண்டுமா ? அப்பிடீனா ..ஆண்களே சீக்கிரம் தூங்குங்க..

men
Last Modified செவ்வாய், 25 ஜூன் 2019 (20:43 IST)
நவீன இணைய உலகத்தில் இருக்கும் எல்லோரும் காலை எழுந்தது முதல், இரவு பெட்டில் உறங்கும் வரை மொபைல் , லேப்டாப், டேப்லாய்ட் போன்றவற்றை இயக்கி தூங்காமல் விழித்திருப்பர். சிலர் ஆபிஸ் டென்சனையும் மண்டைக்குள் போட்டு குழப்பிவிட்டு தூக்கத்திற்கு குட் பை சொல்வார்கள். இப்படிபட்டவர்களால் மறுநாள் வேலை தளங்களுக்குச் சென்று நன்றாக வேலை செய்ய முடியாது.
இப்படித்தான் பெரும்பாலானவர்கள் தங்கள் தூக்கத்தை விட்டொழித்து பெரிதும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது ஒரு புது ஆயிவில் அதிகாலையில் ஆண்கள் சீக்கிரம் தூங்கி எழுந்தால்,  விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
 
டென்மார்கில் உள்ள ஆரஸ் பல்கலைக்கழகம் சுமார் 100 ஆண்களை இந்த ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. அதில் இரவு 10:30 மணிக்கு உறங்கச் சென்று விட்டு, அதிகாலையில் சீக்கிரமே எழுந்திருக்கும் ஆண்களுக்கு விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்குமென்பதுடன் ,குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் இரவு 11 மணிக்குப் பிறகு உறங்கச்செல்வர்களுக்கு விந்தணுகுறைவானதாகவும் இந்த ஆய்வு பகீர் முடிவை வெளியிட்டுள்ளது.
 
 


இதில் மேலும் படிக்கவும் :