குறட்டை சத்தத்தால் தூங்கவைக்க முடியுமா?? ஓர் புதிய முயற்சி
பிரிட்டனைச் சேர்ந்த பாடகர்கள் குழு ஒன்று, குறட்டை சத்தத்திலிருந்து நம்மை விடுவித்து, நம்மை நிம்மதியாக தூங்கவக்கும் விதமாக ”குறட்டை பாடல்” ஒன்றை உருவாக்கியுள்ளது, அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
இரவில் தூங்கும்போது குறட்டை விடும் பழக்கம் ஒரு சாதாரணமான பழக்கம் என்றாலும், குறட்டை விடுபவர்களுக்கு அருகில் படுத்திருக்கும் நபர் குறட்டை சத்தத்தால் தூங்க முடியாமல் பெரும் தொந்தரவுக்கு உள்ளாவார்.
மேலும் குறட்டை விடுவதால் பல தம்பதிகளுக்குள் சண்டையும் விவாகரத்தும் ஏற்பட்டிருக்கிறது எனவும் பல தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் பிரிட்டனை சேர்ந்த ”ப்ளே ஓஜோ” என்ற பாடகர்கள் குழு “குறட்டை பாடல்” ஒன்றை உருவாக்கியிருக்கின்றனர்.
அதாவது குறட்டை விடும் சத்தத்தை மட்டுமே பதிவு செய்து, பின்னணி இசையில் லயமாகவும், குறட்டை ஒலியின் ஸ்ருதிக்கேற்ப லைட் கிடார்களை வாசித்தபடியே முழு பாடலையும் உருவாக்கியிருக்கின்றனர்.
இப்பாடலை தினமும் கேட்பவர்களுக்கு, இனி குறட்டை சத்தம் தொல்லையாக இல்லாமல், ஒரு இனிய கானமாக இருக்கும் என்று இப்பாடலை வடிவமைத்த “ப்ளே ஒஜோ” இசைக்குழு தெரிவித்துள்ளது.
“ப்ளே ஒஜோ” குழுவினர் இந்த பாடலுக்கு “Snorechestra” (ஸ்னோர்கெஸ்ட்ரா) என்று பெயர் வைத்துள்ளனர். இந்த பாடல் பிரிட்டன் மக்களிடம் ஆச்சரியத்தையும் பெரும் வரவேற்ப்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த பாடல், ஆப்பில் ம்யூசிக், ப்ளே ஸ்டோர், ஸ்பாட்டிஃபை போன்ற ம்யூசிக் செயளில் பதிவிறக்கி கொள்ளாலாம் என்பது கூடுதல் தகவல்.