வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (08:43 IST)

மதுரையில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலம், பொதுகூட்டங்களுக்கு தடை.!

Madurai
மதுரையில் அடுத்த 15 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து மதுரை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுரை நகரில் உள்ள சாலைகளிலும், எந்த ஒரு தெருவிலும், பொது இடங்களிலும் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை அனைத்து கட்சிக் கூட்டங்கள் ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்கள் போன்றவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மதுரையில் சமீபத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் கார் மீது பாஜக வினர் செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மதுரையில் அடுத்த 15 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது